♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
படைகளின் ஆண்டவரே உமது இல்லம் அழகானது
உமது இல்லமே அழகானது
1. உமது இல்லத்திலே தங்கிடுவோர் என்றும்
உண்மையில் பேறுபெற்றோர்
எந்நாளும் உம்மையே புகழ்வார்கள்
உமது பேரன்பை எண்ணி மகிழ்வார்கள்
2. வேறிடத்தில் நான் வாழ்வதினும் உமது
ஆலயம் மேலானது
அருளும் மேன்மையும் அளிப்பவரே உமது
உறைவிடம் எனக்குப் புகலிடமே