♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உமக்கே புகழ் உமக்கே புகழ் உமக்கே புகழ்
1. விண்ணகம் விட்டு மண்ணகம் தொட்டு
மானிடர் ஆனவா
நண்பனாய் வந்து உன் உயிர் தந்து
என்னையே மீட்டவா
2. வார்த்தையாய் வந்தவா வான்வழி சொன்னவா
வரமழை பொழிந்தவா வளமையை தந்தவா
3. எண்ணமுடியாத நன்மைகள் செய்து
என்னையே உயர்த்தினாய்
நன்றியால் நெஞ்சம் பொங்குதே உள்ளம்
சொல்லுதே உன் புகழ்
4. அமைதியின் மன்னவா ஆறுதல் தருபவா
ஆற்றலில் வல்லவா அனைத்தும் நீயல்லவா