♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
விண்ணப்பத்தைக் கேட்பவரே - என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசய்யா
1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே
3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்
4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரய்யா
5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்
6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே