காணிக்கை ஏந்தி உம் பீடம் வந்தேன் ஒவ்வொரு நிகழ்வையும் உம் பாதம் தந்தேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


காணிக்கை ஏந்தி உம் பீடம் வந்தேன்

ஒவ்வொரு நிகழ்வையும் உம் பாதம் தந்தேன்

உள்ளார்ந்த நன்றியால் உம் இல்லம் வந்தேன்

நீரென்னை ஆட்கொள்ள வேண்டும் என் இறைவா


1. இறைவா என்னைக் கைகளில் பொறித்துள்ளீர்

அஞ்சாதே என்றும் உன்னோடு நான் என்றீர்

நித்தமும் வருகின்ற துன்பத்தில் ஆறுதல் தந்தீர்

எப்போதும் என்னை உம் அன்பில் வளரச் செய்தீர்

மகிழ்ந்து தருகின்றேன் உள்மனதை

காணிக்கையாய் ஏற்றிடுவாய்


2. அருளில் வாழ நித்தமும் துணைபுரிந்தீர்

புதிய வாழ்வில் வளர உறவும் தந்தீர்

தூய்மையில் வளர்ந்திட அழைப்பை நீர் தந்தீர்

ஒப்புயர்வில்லா பேரருள் பொழிந்துள்ளீர்

நன்றியால் தருகின்றேன் என் வாழ்வை

காணிக்கையாய் ஏற்றிடுவாய்