கிறிஸ்து அரசே இரட்சகரே மகிமை வணக்கம் புகழ் உமக்கே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கிறிஸ்து அரசே இரட்சகரே

மகிமை வணக்கம் புகழ் உமக்கே

எழிலார் சிறுவர் திரள் உமக்கே

அன்புடன் பாடினர் ஓசான்னா (2)


1. இஸ்ராயேலின் அரசர் நீர்

தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர்

ஆசி பெற்ற அரசே நீர் ஆண்டவர் பெயரால் வருகின்றீர்


2. வானோர் அணிகள் அத்தனையும்

உன்னதங்களிலே உமைப் புகழ

அழிவுறும் மனிதரும் படைப்புகளும்

யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே