என் இதயம் உன் ஆலயமே என்னில் குடிகொள்ளவா ஓ தேவா என்னில் உயிரூட்டவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் இதயம் உன் ஆலயமே

என்னில் குடிகொள்ளவா ஓ தேவா என்னில் உயிரூட்டவா (2)

சரணம் தேவா சரணம் தேவா - 4


1. பாவமகற்றி உன் குடிலாக என்னை மாற்றுமையா - 2

உன் உருவம் என் இதயத்திலே - 2

நிரந்தரம் பதிக்குமையா ஓ தேவா நிரந்தரம் பதிக்குமையா - 2


2. நீருக்காக ஏங்கும் என் நிலத்தைப் பாருமைய்யா - 2

வாழ்வு தரும் உம் நீரளித்து - 2

வாழ்வினைச் செழிக்க வைப்பீர்

ஓ தேவா வாழ்வினைச் செழிக்க வைப்பீர் - 2