கலைமான்கள் நீரோடை தேடும் - எந்தன் இதயம் இறைவனை நாடும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கலைமான்கள் நீரோடை தேடும் - எந்தன்

இதயம் இறைவனை நாடும்

உள்ளத்தாகம் உந்தன் மீது

கொண்டபோது எனக்கு வேறென்ன வேண்டும்


1. காலம் தோன்றாப் பொழுதினிலே

கருணையில் என்னை நீ நினைத்தாய்

உயிரைத் தந்திடும் கருவினிலே

அருளினைப் பொழிந்து அரவணைத்தாய்

குயவன் கையாலே மண்பாண்டம் முடைந்திடும்

கதையின் நாயகன் நான் இன்று


2. பாறை அரணாய் இருப்பவரே

நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன்

காலை மாலை அறியாமல்

கண்ணீர் வடித்திடும் நிலையானேன்

சிதறிய மணிகளைக் கோர்த்து எடுத்தால்

அழகிய மணிமாலை நானாவேன்