♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
பாடுகள் அவர் பட்டதும் சிலுவை மீதிறந்ததும்
மனித வாழ்வின் தியாகமே இறைவன் அன்பின் ஆழமே (2)
தியாகமே தியாகமே ஆழமே அன்பின் ஆழமே - 2
1. பாரச்சிலுவை சுமந்ததும் பாவமன்னிப்பு மொழிந்ததும்
ஆணிஅறைந்து துடித்ததும் தந்தை சித்தம் ஏற்றதும் (2)
தியாகமே தியாகமே ஆழமே அன்பின் ஆழமே - 2
2. தாயை நமக்கு கொடுத்ததும் தாய் தாளா துயரில் சூழ்ந்ததும்
வாழ்வில் நிறைவு கண்டதும் இமைகள் மூடி இறந்ததும்
தியாகமே தியாகமே ஆழமே அன்பின் ஆழமே - 2