பெத்லஹேம் என்னும் அப்பத்தின் வீட்டில் வந்த நிலவே தித்திக்கும் மன்னா நற்கருணையாக வந்த அமுதே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பெத்லஹேம் என்னும் அப்பத்தின் வீட்டில் வந்த நிலவே

தித்திக்கும் மன்னா நற்கருணையாக வந்த அமுதே

என்னோடு தங்கிட வா என் இயேசு பாலகா

உன்னோடு என்னையும் விண்ணோடு மண்ணையும்

இணைக்கும் பாலனே வா

ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோ ம் ம் ம்


1. ஆதி மனிதன் பாவம் செய்து ஒழிந்த போதிலே

ஆடையாகி மூடும் அருளின் குழந்தை ஆனீரோ

ஆடு மேய்க்கும் ஆபேல் தந்த ஆட்டு இரத்தம் போல்

ஆன்ம மீட்பின் விலையாய் ஆட்டுக் குட்டியானீரோ

நேர்மை எனும் ஆடைக்கச்சை நானும் அணியவா

உண்மை எனும் இடைக்கச்சை உடுத்திக் கொள்ளவா

தூய்மையின் ஆடையில் என்னையும் மூடிட வா

வா வா தேவா நாதா நீ வா


2. பாலைநிலமாய் பாழ்வெளியாய் பரிதவிக்கையிலே

தாகம் தீர்க்கும் நீரோடையாய் ஊற்றும் ஆனீரே

வாழ்வளிக்கும் உணவின்றி வாடி நிற்கையிலே

வார்த்தை எனும் அப்பமாகி வான் விருந்துமானீரே

ஆண்டவரின் ஆவி தங்கும் அமைதி அரசே வா

ஆனந்தமும் அக்களிக்கும் ஆட்சியைக் கண்டிட வா

அன்பென்னும் அமுதே ஆசையின் ஓசையே வா