வாழ்க புனித செசிலியே நிதம்
வளர்க உந்தன் திருப்புகழே
வானில் தேவன் புகழ்பாட நீ
வழங்கும் இன்னிசை கேட்கின்றது
1. உலகில் வந்த நாளெல்லாம் நீ
உன்னதன் புகழைப் பாடி வந்தாய்
உந்தன் பாடலில் அவர் மகிழ்ந்தார் - பின்
தன்னோடிருக்க உனை அழைத்தார்
2. வாழ்வு என்பது ஒரு இராகம் அதில்
வளமும் வறுமையும் வரும் பாகம்
அன்பு என்பது அதன் தாளம் இவை
செசிலி நமக்கு தந்த பாடம்