மகத்துவம் நான் கண்டேன் என் இறையவனே உம் மகத்துவம் நான் கண்டேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மகத்துவம் நான் கண்டேன் என் இறையவனே

உம் மகத்துவம் நான் கண்டேன் - நீர்

மனிதனில் காட்டிய அளவில்லா அன்பினில்

மகத்துவம் நான் கண்டேன்


1. உம் புகழ் சாற்றிடும் படைப்பினிலே

மகத்துவம் நான் கண்டேன்

படைப்பினில் விந்தையாம் கோள்களிலே

மகத்துவம் நான் கண்டேன்

கோள்களில் சிறந்தது இப்புவியினில்

மகத்துவம் நான் கண்டேன்

புவியினுள் ஓடுகின்ற நீரினில்

மகத்துவம் நான் கண்டேன்

மனிதனில் நீர் தந்த சாயலில்

மனிதனுள் நீர் வாழும் நிலையில்

மகத்துவம் நான் கண்டேன்


2. விண் இன்று மண்ணகம் வந்ததிலே

மரியாவின் உதரத்தில் வந்ததிலே

மரணத்தை வென்ற உம் உயிர்ப்பிலே

வெண்ணிற அப்பத்தின் வடிவிலே