வாழ்வென்ற கொடைக்காக நிறைவாக யாம் நன்றி நவில்கின்றோம்


வாழ்வென்ற கொடைக்காக நிறைவாக யாம்

நன்றி நவில்கின்றோம் - அதை

முறையாக வாழ்ந்திடவே நிறை ஞானம்

தினம் நல்க வேண்டுகிறோம்


1. வாழ்கின்ற நிமிடங்கள் பயனுள்ளதாய் மாற

வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிந்தே யாம் வாழ்ந்திட

உமதாவி எமை ஆள வேண்டும்


2. வாழ்க்கையை வாட்டிடும் துயரங்கள் சோகங்கள்

பாதையை மறைத்திடும் இருளான மேகங்கள்

என்றென்றும் மறைந்தோட வேண்டும்

இறை இயேசு நாயகன் காட்டிய வழியிலே

நிறைவாழ்வு காண்போம்