♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
தனிமையில் இனி நானில்லை தலைவர் இருக்கின்றார்
தரணி அழியும் காலம் வரையில்
அருகில் துணையிருப்பார் தேவன்
1. தேடிவைத்த செல்வம் யாவும் தேய்ந்து போய்விடுமே
நாடி வந்த சுகங்கள் எல்லாம் நலிவு கண்டிடுமே
கூடி வந்த உறவும் கூட கலைந்து சென்றிடுமே
தேவன் நீ என்றும் அருகில் இருப்பாயே
தேடும் எனக்கு வாழ்வில் என்றும் துணை அருள்வாயே
2. இம்மை முழுதும் கொஞ்சும் அழகு
என்னைப் புன்னகைக்கும்
தம்மைக் கருதா நண்பர் உறவு என்னைக் கரம் பிடிக்கும்
நம்பும் நல்ல கொள்கை என்றும் நெஞ்சில் உரமளிக்கும்