என் கர்த்தரே! என்னை ஆதரிப்பவரே, நீர் எங்கேயிருக்கிறீர்? ஒ என் நல்ல சேசுவே! நீர் எங்கேயிருக்கிறீர்? உலகம் பசாசு சரீரமென்கிற சத்துருக்கள் எவ்விதமாய் என்னை எதிர்க்கிறார் களென்று பாரும். நான் பசாசின் கொடுமையில் அகப்பட்டிருக் கிறேன். அதனால் நான் முழுமையும் கீழே விழுந்தேன் சுவாமீ. நீர் விரைந்து வாரும். நீர் வந்து சத்துருக்களிடத்திலிருந்து என்னை விடுவியும். இல்லையேல் அவர்கள் என்னை மேற்கொள்வார்கள். ஓ மகா நேசத்துக்குரிய சேசுவே! என்னைக் கைவிடாமல் என் ஆத்துமத்தைச் சுத்திகரித்தருளும். நீர் என்னைக் கைவிடுவீராகில் பசாசானவன் என் ஆத்துமத்தைக் கறைப்படுத்திப் போடுவான். நீர் என் பலவீனத்தை நன்றாய் அறிந்திருக்கிறீர். ஆகையால் நான் உம்மிடத்தில் ஓடி வந்து எனக்கு உதவி செய்ய உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன். நீர் கட்டப்படவும் ஆணிகளால் ஊடுருவப்படவும், சிலுவையில் அறையப்படவும் உம்மை ஒப்புக்கொடுத்தீர். ஆகையால் தேவரீர் அவைகளைப் பார்த்து என்னைப் பாவத்தின் அடிமைத்தனத்தினின்று விடுவித்துப் பசாசின் கண்ணிகளினின்றும் அதன் எதிர்ப்பினின்றும் என்னைக் காத்தருளும் சுவாமீ, ஆமென்.