♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
வா வா வரமும் தா நாவில் வா எம் நாதனே
1. விண்ணகம் நின்று இறங்கி வந்தவா
மண்ணோரை சாவில் மீட்டு நின்றவா
தன்னிகரில்லா மன்னவனே
தரணி போற்றும் விண்ணவனே
எம்மரும் ஜோதியே எம்மில் வா
2. நற்கனி தந்திடும் நல்ல மரமும் போல்
பொற்கொடி மாமரி பூவில் உனைத் தந்தார்
நீரே நல்ல கனியாக
ஏவைக் கனியின் மருந்தாக
ஏழை எங்கள் விருந்தாக
3. உம்மில் நாங்கள் நிலைத்து நின்றதால்
எம்மில் நீவிர் நிலைத்து வாழ்கின்றீர்
நீரே திராட்சைச் செடியென
நாங்கள் இணைந்தே கொடியென
நல்ல கனிகள் தந்திடுவோம்
4. நீவிர் எங்கள் நல்ல மேய்ப்பராம்
நாங்கள் உந்தன் மேய்ச்ச லாடுகளாம்
நல்லாயன் ஒருவன் தன் மந்தைக்கு
தன் ஜீவன் முழுதும் தருதல் போல்
உம் ஜீவன் எமக்கு ஈந்தாயே