ஓ தூய கன்னித்தாயே நான் உம்மை நேசிப்பேன் ஊழியுள்ள காலமும் நான் உம்மை நேசிப்பேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஓ தூய கன்னித்தாயே நான் உம்மை நேசிப்பேன்

ஊழியுள்ள காலமும் நான் உம்மை நேசிப்பேன்


1. மோட்ச இராக்கினி தன்னை பாக்களால் போற்றுவோம்

வாக்கோடே உள்ளம் சேர வந்தனம் சாற்றுவோம்


2. சேயரானோ ரெல்லோரும் சேர்ந்தொன்று கூடுவோம்

தூய நேசத்தினாலே சோபனம் பாடுவோம்


3. அன்னையின் மாட்சி தன்னை எல்லோர்க்கும் காட்டுவோம்

மென்மேலும் அவள் பேரில் மெய்யன்பை மூட்டுவோம்


4. எல்லா விதத்திலேயும் எம் தாயை எண்ணுவோம்

பொல்லாங்கு தீர அவள் பொற்பாதம் நன்னுவோம்