♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இறைவா உமது அடியார் இவர்க்கு
இரங்கி அமைதி அளித்தருளும்
மண்ணக கோயிலில் ஏற்பதுபோல்
விண்ணக கோயிலில் இடம் அருளும்
1. திருநீராடி புனிதம் அடைந்து
திருஅருட் சாதனம் பலவும் பெற்று
அழியா வாழ்வை பெற்ற தலத்தில்
அழியும் உடலைச் சுமந்து வந்தோம்
2. நித்திய வாழ்வின் உணவை உண்டு
நித்தம் உமது வார்த்தையைக் கேட்டு
இனிவரும் வாழ்வில் நம்பிக்கை தந்த
இல்லத்தில் இவரைக் கொண்டு வந்தோம்
3. பாவப் பொறுத்தல் பலமுறை தந்து
பரமன் அன்பை இவர்க்கு அருளிய
தலமாம் கோயில் நோக்கியே வந்தோம்
தயவாய் இவர் பிழை பொறுத்தருள்வீர்
4. கிறிஸ்துவின் மறைவுடல் அங்கம் இவரை
திருச்சபை மக்கள் பரிவுடன் கொணர்ந்தோம்
என்றும் அழியா கிறிஸ்து உடல் போல்
இன்றும் இவர் மகிமை பெறவே
5. வானவர் கூடி வரவேற்றிவரை
ஆபிரகாமின் மடியில் வளர்த்தி
ஏழை லாசர் அடைந்த பேற்றை
எம்மவர் இவரும் அடைந்திடவே
6. எரியும் தீபம் கரத்தில் ஏந்தி
ஏனத்தில் எண்ணெய் நிறையத் தாங்கி
நினையா நேரம் வந்திடும் தலைவரை
அணையா விளக்குடன் சந்திக்கச் செல்வோம்