நன்மையெல்லாம் தந்தவரே தந்தையே இதய நன்றியினால் புகழ்கின்றோம் உம்மையே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நன்மையெல்லாம் தந்தவரே தந்தையே

இதய நன்றியினால் புகழ்கின்றோம் உம்மையே (2)


1. ஆண்டவரே ஆதியும் நீர் அந்தமும் நீரே (2)

ஆட்கொண்ட ஆவியும் நீர் அரசரும் நீரே (2)


2. கண்ணோடு ஒளி தந்து காண வைத்தீரே (2)

காட்சி எழில் கோடி தரும் கர்த்தரும் நீரே (2)


3. உணவோடு சுவை படைத்து உண்ண வைத்தீரே

ஊட்டிவிட்டு தான் மகிழும் அன்னையும் நீரே