சம்மனசுக்களுக்கும் மனிதருக்கும் அதிபதி இராசாவானவர் இதோ இந்தப் பீடத்தின் மேல் எழுந்தருளி வரப் போகிறார். உலகக் காரியங்களின் மேல் என் சிந்தை நாடாமல், உம்மை மாத்திரமே நாடியிருக்க, ஆண்டவரே, எனக்கு உமது ஞானத்தை நிரம்பத் தந்தருளும். பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் பரம கர்த்தருமாய் சர்வ வல்லமையுள்ளவருமாயிருக்கிற நித்தியப் பிதாவே நான் எக்காலத்திலும் எவ்விடத்திலும் உம்மை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டு வர எனக்குக் கடமை உண்டு. ஆகையால் தேவரீரை இடைவிடாமல் ஆராதித்துக் கொண்டு வரும்படிக்குச் சேசு கிறிஸ்துநாதரோடு ஐக்கியப்படுவதை விட வேறோன்றும் காணேன் சுவாமீ. சகல முத்தி பேறு பெற்றவர்களும் அவரைக் கொண்டு தேவரீருக்கு அர்ச்சனை செய்கிறார்கள். சகல சம்மனசுக் களும் தாழ்ச்சி நிறைந்த அச்சத்தோடு நடுக்கமுற்றுத் தங்களில் ஒருமித்து அவரைக் கொண்டு தேவரீரை ஸ்துதித்துப் புகழு கிறார்கள். ஆண்டவரே எங்கள் அற்ப புகழை அந்தச் சம்மனசுக் களுடைய திருப்புகழோடு ஒன்றாகக் கூட்டி தேவரீருக்குக் காணிக்கையாக வைக்க எங்களுக்கு உத்தரவு தந்தருளும்.