வருந்தி சுமந்திடும் மாந்தரே வாருங்கள் செல்வோம் இறைவனிடம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வருந்தி சுமந்திடும் மாந்தரே

வாருங்கள் செல்வோம் இறைவனிடம் (2)

சுமைகளை அவரே இறக்கி வைப்பார்

சோர்வினை அவரே போக்கிடுவார் (2)

சரணம் சரணம் சரணம் தேவா - 4


1. குற்றம் குறைகளைக் களைந்திடுவார்

மன்னிப்பும் அவரே வழங்கிடுவார் (2)

அனாதையாய் நம்மை விடாமலே

அபயம் நமக்கு அளித்திடுவார் (2)

சரணம் சரணம் சரணம் தேவா - 4


2. அமைதியின்றி வாழ்வோர்க்கு

ஆறுதல் மொழிகள் கூறிடுவார் (2)

அன்பும் அருளும் நமக்களித்து

மகிழ்வினை நமக்கே தந்திடுவார் (2)

சரணம் சரணம் சரணம் தேவா - 4