♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
தேடும் அன்பு தெய்வம் என்னைத் தேடி வந்த நேரம்
கோடி நன்மை கூடும் புவி வாழும் நிலைகள் மாறும்
இந்த வானதேவன் தந்த வாழ்வுப்பாதை
எந்தன் வாழும் காலம் போதும்
1. வார்த்தையாகி நின்ற இறைவன் - இந்த
வாழ்வைத் தேர்ந்த தலைவன்
பாரில் எங்கும் புதுப்பார்வை தந்து - அந்தப்
பாதையில் அழைத்த அறிஞன்
காலம் கடந்த கலைஞன் என் தலைவன்
2. அடிமை அமைப்பு இங்கு ஒழிய - எங்கும்
மனித மாண்பு நிறைய
புரட்சிக் குரல் கொடுத்து புதிய வழி வகுத்து
புதுமை செய்த பெரும் புனிதன்
வாழ்வைக் கடந்த இறைவன் என் தலைவன்