நீயே துணை எனக்குன் நிழலே துணை வானின்று வந்த தெய்வம் எந்தன் இயேசுவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நீயே துணை எனக்குன் நிழலே துணை

வானின்று வந்த தெய்வம் எந்தன் இயேசுவே

வழிகாட்ட வா தென்றலே


1. ஏழையின் கண்ணீர் துடைத்திடவே என்னுள்ளம் வருவாயே

எளியோர்க்கு செய்தி அறிவிக்கவே

என்னையும் நீயும் அழைத்தாயே

வண்ணப் ப+விதழ் வாசம் சிந்திடும் உந்தன் மொழியன்றோ

வரம் பொழியும் அந்த வானமன்றோ


2. உறவை இழந்து நான் தவிக்கையிலே உறவாக வந்தாயே

உயிர்மூச்சுக்காற்று தந்தென்னை

இறைவாழ்வில் நிலைக்கச் செய்தாயே

உந்தன் சந்நிதி நாடி வந்தது எந்தன் உயிரன்றோ

உன்னருள் தரும் அந்த வானமன்றோ