இவ்வுலகத்தை விட்டுப் பிரிகிற இந்தக் கிறீஸ்துவனுடைய ஆத்துமமே! உன்னைப் படைத்த சர்வ வல்லபப் பிதாவாகிய சர்வேசுரனுடைய நாமத்தினாலும், நித்திய சீவியமுள்ள தேவனாகிய அவருடைய அமல சுதனுமாய் உனக்காகப் பாடு பட்டவருமாகிய சேசுகிறிஸ்துவின் நாமத்தினாலும், உன்னிடத்தில் எழுந்தருளி வந்தவராகிய இஸ்பிரீத்துசாந்துவின் நாமத்தினாலும், தேவமாதா, பக்திச் சுவாலகர், ஞானாதிக்கர் முதலான நவகண வானோர்களுடைய நாமத்தினாலும், பிதாப்பிதாக்கள், தீர்க்க தரிசிகள், அப்போஸ்தலர்கள், சுவிசேஷகர், வேதசாட்சிகள், ஸ்துதியர், கன்னியர் இவர்களுடைய நாமத்தினாலும் சுவாமி யுடைய திருவடியாரான சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய நாமத் தினாலும், இந்த நிர்ப்பாக்கியமான பரதேசத்தை விட்டு நிறைந்த நம்பிக்கையோடு உமது நித்திய வீடாகிய பரகதிக்குப் புறப்படு வாயாக. இன்று நீ சமாதானத்தின் வாசமடைந்து, சீயோனென்கிற மோட்ச இராச்சியத்திலே குடிகொண்டு இளைப்பாறக் கடவாயாக, ஆமென்.