♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அன்பென்னும் சுரங்களில் தெய்வீக சந்தங்களில்
விண்ணக ராகத்தில் மீட்பென்னும் கீதத்தைப்
பாடிய என் தலைவா
உன் அன்பு கானம் பாட என்னில் என்ன ஆனந்தம் ஆ
1. கானக் குயிலின் ராகமும் தென்றல் தவழும் கீதமும்
அருவி விழும் ஓசையும் அலைகள் பாடும் இன்பராகம்
உந்தன் சொந்த ராகங்கள்
உந்தன் படைப்பிலே எத்தனை ராகங்கள்
இறைவா எத்தனை ராகங்கள் ஆ
2. பறவை பாடும் கானமும் பாயும் நதியின் ஓசையும்
வண்டினத்தின் ரீங்காரமும்
எந்தன் ஆன்ம சுரங்கள் அனைத்தும்
உந்தன் சொந்த ராகங்கள்