ஆராதிக்கப் பாத்திரமான ஏக திரித்துவமே! நீசப் பாவியாயிருக்கிற அடியேன் தேவரீருடைய உந்நத மகிமைப் பிரதாப சோபனத்திற்குச் செய்யவேண்டிய பணிவிடை நமஸ்காரங்களைச் செய்ய வேண்டு மென்று, சுத்தக் கருத்துடனே உமது திரு நாமத்தைக் குறித்து இந்த உந்நத பரம பூசையைக் காண்கிறேன். என் திவ்விய இரட்சகரே! என் ஈடேற்றத்திற்காகக் கொடுக்கப் படுகிற இந்த மாட்சிமைப் பொருந்திய பலியைக் கொடுக்கிற குருவுடனே நானும் என் கருத்தினாலே எகோபித்து, இந்தப் பலியைக் கொடுக்க எனக்கு விடை கொடுத்தருளும். என் பாவங் களுக்காகத் தேவரீர் கபால மலைமேல் சிலுவையில் அறையுண்டு கொடுத்த இரத்தப்பலியை நான் கண்ணாற் கண்டும் என் இருதயத்தில் எத் தன்மையான தேவ் பற்றுதல் உண்டாகத் தகுமோ, அத் தன்மையான உத்தம கருத்தை இரத்தம் சிந்தாத பலியாகிய இந்தப் பூசை நேரத்திலும் என் இருதயத்தில் பிறப்பித்தருளும், சுவாமீ.