வானவர் வாழ்த்தும் தூய நல் அமுதே வாழ்வின் வழித்துணையே அமுதே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வானவர் வாழ்த்தும் தூய நல் அமுதே

வாழ்வின் வழித்துணையே அமுதே


1. தெய்வீகம் மறைத்து மனுவுருவெடுத்தீர்

தெய்வமாய் மாற்றிடவோ - எம்மை

மண்ணுயிர் மறைத்து உணவினில் வந்தீர்

விண்ணகம் சேர்த்திடவோ எம்மை


2. அன்பு என்னும் அகல் விளக்கேற்றி

ஆவலாய் சுடரானோம் உமக்காய்

ஆவலாய் சுடரானோம்

ஆவல் என்னும் வேட்கையைத் தணிக்கும்

அருட்கடல் நீராவாய் எமக்காய்


3. கலங்கித் தவித்து கடலில் நின்றேன்

கலங்கரை விளக்கானாய் ஒளியாய்

கலங்கரை விளக்கானாய்

துலங்கிடும் ஒளியில் வழியும் சென்றேன்

துணையைக் கண்டேன் அழியா