ஆ பிதாவே! தேவரீருடைய ஊழியனாகிய அடியேன் அகப்பட்டிருக்கும் ஆபத்தைப் பாரும். இதோ என்னை விழுங்க நரக வாசல் திறந்திருக்கின்றது என்னைக் கொத்திச் செல்ல துஷ்டப் பசாசுகள் சூழந்திருக்கின்றன. நான் அவநம்பிக்கையாய்ச் சாக என் பாவக் கொடுமை என் கண் முன்பாகக் காணப்படுகிறது. ஆயினும் தேவரீருடைய மட்டற்ற கிருபையை நினைத்து, என் இரட்சகரான சேசுகிறீஸ்துநாதருடைய திருப்பாடுகளை நம்பி யாதொன்றுக்கும் பயப்படமாட்டேன், உம்மிடத்தில் சேருவேன், உம்மிடத்தில் வாழ்வேன். இதுவே என் நம்பிக்கை.