நெஞ்சம் தன்னில் நிறைந்து நிற்கும் புனித தோமையே
ஆண்டவரே என் கடவுளே என்று சொன்னவரே
தூதரே இயேசுவின் சீடரே
தாருமே உம் அன்பைத் தாருமே
1. துயரினில் துவண்டிடும் எங்கள் உள்ளமே
ஆறுதல் அளித்திடும் உந்தன் பார்வையே
அன்பின் உருவே உம் தாள் பணிந்தோம்
அன்பாய் ஏற்று எம் கண்ணீரைத் துடைத்திடுவாயே
2. கடலிலும் கரையிலும் தொழில் புரிவோரை
காத்திடவே தினம் தினம் வேண்டுகிறோமே
கருணை புரிவாய் அருளைப் பொழிவாய்
காரிருளை அகற்றி எமைக் காத்திடுவாயே