இதயம் அன்பு இதயம் இயேசுவின் அன்பு இதயம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இதயம் அன்பு இதயம் இயேசுவின் அன்பு இதயம் -2

ஓராயிரம் நெஞ்சம் புகழும்

இதயத்தின வேன்தே வாழி உதயத்தின் ஒளியே வாழி

ஒராயிரம் நெஞ்சம் புகழும் ஈடில்லா அன்பு இதயம்


1. கல்லான இதயம் கரைய செந்நீர் ஊறும் இதயம்

சுமைகள் சுமந்து சோர்ந்தால் ஆறுதல் கூறும் இதயம்

தொலைந்த ஆட்டைத்தேடி மகிழும் ஆயன் இதயம்

திருந்தி திரும்பும் மகனைத் தழுவும் தந்தை இதயம்

நம் இயேசுவின் அன்பு இதயம்


2. சிலுவைப் பாடுகள் வழியே மீட்ப்பு நல்கும் இதயம்

மண்ணுயிர் வாழ அன்று தன்னுயிர் ஈந்த இதயம்

நன்றி மறந்த நம்மை மன்னிக்கும் நல்ல இதயம்

பாவி என்றே தெரிந்தும் கருணை பொழியும் இதயம் - நம்