உள்ளத்தின் உள்ளே ஒரு தேடல் இறைவனுக்கே எந்தன் பாடல் உருவமில்லாத வலிமை இது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உள்ளத்தின் உள்ளே ஒரு தேடல் இறைவனுக்கே எந்தன் பாடல்

உருவமில்லாத வலிமை இது

வாழ்வினை வெல்லும் இலக்கு இது

உள்ளம் என் உள்ளம் அது இறைவனின் இல்லம்

செல்லும் அது செல்லும் உன் வழிதனில் என்றும்


1. பசியினில் நானும் வாடிடும் பொழுது

மன்னா பொழிகின்ற உள்ளம்

தாகத்தினாலே தவித்திடும் பொழுது

பாறையில் நீர் சுரக்கும் உள்ளம்


2. பகலினில் நானும் பயணத்தை தொடர

மேகத்தூணாகும் உள்ளம்

இலக்கினை அடைய இரவிலும் செல்ல நெருப்புத்தூணாகும் உள்ளம்