எனது பிரஜையே உனக்கு நான் என்ன தீங்கு செய்தேன்
எது காரியத்தில் உன் மனதுக்கு கஸ்திவருவித்தேன் சொல்லாய்
1. எகிப்து நாட்டிலிருந்து உன்னை நான்
மீட்டு வந்ததைப் பற்றியோ
உன் இரட்சகருக்குச் சிலுவையை ஆயத்தப்படுத்தினாய்
2. நாற்பது வருஷகாலமாய் உன்னை
வனாந்திர மார்க்கமாய்க் கூட்டிக் கொண்டு போய்
மன்னாவென்னும் அமிர்த போஜனத்தைத் தந்து
நன்மை பொழியும் பூமியில் உன்னைச் சேர்த்ததைப்
பற்றியோ உன் இரட்சகருக்கு சிலுவையை ஆயத்தப்படுத்தினாய்
3. உனக்கு நான் செய்ய வேண்டியதிருந்தது என்ன
இன்னும் செய்யாமல் போனேன் உன்னை
தியான முந்திரிகைச் செடியாக நட்டு வைத்ததை
பற்றியோ நீ எனக்கு மிக்க கசப்பாக
என் தாகத்துக்குக் காடியைக் கொடுத்து
இரட்சகரின் விலாவை ஈட்டியால் குத்தி திறந்தாய்
4. உன் முகாந்திரமாக எகிப்து நாட்டாரையும்
அவர்கள் தலைச்சன் பிள்ளைகளையும் நான்
தண்டித்ததைப் பற்றியோ நீ என்னை கட்டியடிக்க கையளித்தாய்
5. எகிப்து நாட்டிலிருந்து உன்னை மீட்டு செங்கடலில்
பாரவோனை மூழ்கடித்ததைப் பற்றியோ
குருப்பிரசாதிகள் தலைவர் கையில் என்னை கையளித்தாய்
6. உனக்கு முன்பாக நான் செங்கடலைத் திறந்ததைப்
பற்றியோ நீ என் விலாவை ஈட்டியால் குத்தி திறந்தாய்
7. மேகத் தூண்போல உனக்கு நான் வழிகாட்டினதைப்
பற்றியோ பிலாத்துவின் அரண்மனைக்கு
என்னை இழுத்துக் கொண்டு போனாய்
8. வனாந்திரத்தில் உனக்கு மன்னாவென்னும் அமிர்த
போஜனம் தந்ததைப் பற்றியோ நீ என்னைக்
கன்னத்தில் அறைந்து கட்டி வைத்தடித்தாய்
9. கற்பாறையிலிருந்து குளிர்ந்த ஜலம் நான்
உனக்குக் கொடுத்ததைப் பற்றியோ நீ எனக்கு
பிச்சு கலந்த காடியைக் குடிக்க கொடுத்தாய்
10. கானான் தேசத்து இராஜாக்களை
உன்னைப் பற்றி நான் சங்கரித்ததினாலேயோ
நீ என் சிரசில் மூங்கில் தடியால் அடித்தாய்
11. உன் கையில் நான் இராஜ செங்கோல்
கொடுத்ததைப் பற்றியோ
நீ என் சிரசில் முள்முடியை வைத்தாய்
12. உன்னுடைய பெயர் விளங்கும்படி செய்ததினாலேயோ
நீ என்னை சிலுவை மரத்தில் தொங்கும்படி செய்தாய்