அருளாக எம் பூமி இருபோகம் விளைகின்ற
இனிதான காலங்கள் வேண்டும்
வற்றாத நதிகளும் வளராத பகைமையும்
எம் தேசம் இனி காண வேண்டும்
உன் பேரைச் சொல்லியே வளர்கின்ற நெறிகளை
அன்பாலே ஆட்கொள்ள வேண்டும்
வளமையும் செழுமையும் வருகின்ற ஆண்டிலே
எல்லார்க்கும் என்றாக வேண்டும்
எங்கும் எங்கும் மனம் மகிழ்ந்திட என்றும்
இன்பம் இன்பம் என்று இணைந்திட
கையில் தீபம் ஏந்தினோம்
எல்லையில்லா அன்பு பிறந்தது இனி
இல்லை இல்லை பகை உணர்வுகள்
நெஞ்சில் நேசம் தாங்கினோம்
விண்ணின் விடிவெள்ளி வந்தது - உள்ளக்
கண்கள் ஒளிபெற நின்றது
எங்கும் மங்கள கீதங்கள் பொங்கிடப் பொங்கிட
வான் வீட்டிலே பூத்த மலரிது
நான் பார்க்கவே பூமி வந்தது
காலம் யாவும் வாழும் தேவன் என்றும்
கருணை சொல்லும் கவிதையாக
1. என்ன தவம் செய்தேன் நான் உன்னை அறிந்திடவே
செல்வமே எந்தன் செல்வமே என்றழைத்தேன்
நின்னைச் சரணடைந்து - நான்
என்னைப் பரிசளித்தேன்
புன்னகை ஒன்றினைத் தந்திடு என் செல்வமே
அவனியில் நீ புது சுகந்தம்
அருள்மலர்களின் ஒரு வசந்தம் ஓ
கருணையின் இறைகாலம் சொல்லிட