என் ஜீவன் தேடும் தெய்வம் என் நெஞ்சில் வரும் நேரம் என் உள்ளம் எங்கும் பூப்பூக்குதே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் ஜீவன் தேடும் தெய்வம் என் நெஞ்சில் வரும் நேரம்

என் உள்ளம் எங்கும் பூப்பூக்குதே

புது சந்தோஷங்கள் எனில் தோன்றுதே

வாரும் தேவா வாரும் புதுவாழ்வு என்னில் தாரும்

உன் ஆசீர் பொங்க நான் வாழுவேன்


1. எனைத் தேற்றும் உன் வார்த்தை உயிரானது - நான்

உனக்காக உயிர் வாழ உரமாகுது

எனையாளும் நினைவெல்லாம் நீயல்லவா - நிதம்

துணையாகும் என் வாழ்வின் வரமல்லவா


2. எனைத் தாங்கும் உன் அன்பு மாறாதது - அது

என் வாழ்வின் செல்வத்துள் மேலானது

என் சொந்தம் இனி என்றும் நீயல்லவா - நிதம்

என் வாழ்வின் பொருள் தேடும் உறவல்லவா