சுமைதாங்கி வாழ்க்கையோ சுகமான ராகங்கள் வலுவான துன்பமோ பரமனின் சொந்தங்கள்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சுமைதாங்கி வாழ்க்கையோ சுகமான ராகங்கள் -2

வலுவான துன்பமோ பரமனின் சொந்தங்கள்

கல்வாரி மேடைகள் உறவாகும் பாதங்கள்


1. ஒளியினை ஏற்றிடும் தீபம் தன்னை அழித்தே ஒளியினை ஏற்றும்

உழைப்பினில் உயரும் மனிதன்

உடல் அழித்தே உலகினில் உயர்வான்

சுமைகளை விரும்பியே சுமப்பதும் இன்று இன்பமே -2

துன்பங்களின் முடிவினிலே இன்பங்கள் பிறந்திடுமே


2. சுகங்களை இழப்பது ஒன்றே இங்கு

பிறர்நல வேள்வியின் உணர்வை

தன்னலம் மறந்த இறைவன் இந்த

தரணியை உயர்த்தவே இறந்தார்

கலங்கரை தீபமாய் இன்று இருப்பது சிலுவையே 2

சுமைகளின் சுரங்களில் பிறப்பது பூபாளமே