♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இனிய இயேசுவே என் இதயம் வாருமே
தனியாய் பேசவே மனம் உனையே நாடுதே
1. ஒளியும் உயிருமில்லா எளிய பேழையில்
எளியேன் எனக்காய் இரவும் பகலும்
மறைந்து இருப்பதேன்
2. வெண்மை அப்பந்தன்னில் உண்மையாகவே
உயிரும் உடலும் ஒருங்கே இணைத்து
எமக்குத் தந்தாய்
3. உந்தன் வருகை தந்தாய் எந்தன் நெஞ்சமே
இறைவன் வதியும் இல்லிடமாகவே
உயர்ந்து மாறுமே
4. வழியும் உயிரும் நீயே அழியா உணவும் நீயே
குறையாக் கருணை நிறைந்து பெருகும் இன்ப ஊரணியே