♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
பாடிடுவேன் போற்றிடுவேன்
பாதத்தில் பணிந்து நான் வணங்கிடுவேன்
பாவி எந்தன் பெயர் சொல்லி
அன்புடனே நீ அழைத்து
ஆதரவாய் என்னை நடத்திடும் உன் புகழ்
1. நெஞ்சத்திலே நிறைந்ததெல்லாம்
நீங்காத உன் நினைவே
ஆண்டவரே என் இயேசுவே
ஆளுகின்றாய் என் இதயத்தையே
அச்சமில்லை ஆ அதிர்ச்சி இல்லை ஆ
அலைந்திடும் கடலலை ஓய்ந்திடும் வரையில் நான்
2. இலையுதிர்ந்த மரமதைப் போல்
நான் தனியே வாடினாலும்
நிலைகுலைய விடமாட்டீர்
எனதருகில் இருக்கின்றீர்
பாவத்திலே வாழ்ந்திருந்தும்
பாசத்தை நீ மறுக்கவில்லை
தேவன் உந்தன் தரிசனமோ
எனை என்றும் பிரிவதில்லை