♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மதுமலர் நிறைகொடி கையிலேந்தும்
மாட்சிமை நிறைசூசை மாமுனியே ஓ
துதிவளர் உமது நற்பதம் வந்தோம்
துணை செய்து எமையாளும் தாதையரே
1. வானுல கிழந்ததால் கர்வமுற்ற
வன்மனக் கூளியின் வலையறுக்க
தான் மனுவாய் உதித்த கடவுள்
தாதையாம் சூசை உன் தஞ்சம் வந்தோம்
2. ஒளிநிறை கதிரோனை ஆடை எனும்
உடுவதைத் தலையிலும் முடிபுனைந்த
துளிநிகர் அருள்பொழி மாமரியாள்
துணைவனாம் சூசை உன் துணைபுரிவாய்
3. தூதர் வானோர்க்கு மேலாய் உயர்ந்து
துலங்கும் சிம்மாசனந் தனிலிருந்து
ஆதிரையோரைக் கண் பார்த்துனது
ஆசியை அளித்தருள் மாதவனே
4. தாய் தந்தையினால் மனம் மிக வாடி
தயங்கிடும் பாலர் போல் முகம் வாடி
வாய் விட்டு அழுதுந்தன் சகாயம் என்றும்
வருந்திக் கேட்டிட வந்தோம் மாதவனே
5. பாவம் எனும் சுமையால் நசுங்கி
பரிதவித்தழுதிடும் பிள்ளைகளே
ஜீவியம் தரும் அமுதருள் சூசை
திருப் பதம் செல்லுவேன் திடம் கொண்டு
6. படிப்பதற்குறிய நற் புத்தியின்றி
பயந்து கலங்கிடும் பிள்ளைகளே
தடிமலர் கொடி வளன் இடம் செல்வீர்
கல்வி வரம் உமக்களித்திடுவார்
7. உலகமும் சரீமும் ஒடிதினம்
ஒயாது போர் செய்ய வரும் போது
கலகத்திற் கிடம்கொடா சூசைமுனி
கைமலர் கொடி நிழல் அடைவீரே
8. வாழி கடவுள் கைதாதையரே
வாழி மதுமலர் கொடியோனே
வாழி எம் ஊரின் நற் காவலனே
வாழி என்றென்று வாழி சொல்வோம்