மகிமை மகிமை விண்ணில் மகிமை
அமைதி அமைதி மண்ணில் அமைதி
தூதர்கள் கிறிஸ்மஸ் கீதமிதே தூயவர் பிறப்பினிலே
நாமும் துதிப்போம் மகிழ்வினிலே
கிறிஸ்மஸ் ஹேப்பி கிறிஸ்மஸ்
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்
1. ஏசையா சொன்ன இம்மானுவேல் - இவர்
நமக்கென பிறந்தாரே
என்றுமுள்ள தந்தையின் திருப்பெயர் தாங்கி
குழந்தையாய் மலர்ந்தாரே
2. வாருங்கள் நாமும் தாவீதின் ஊராம்
பெத்லஹேம் சென்றிடுவோம்
வானவர் சொன்ன ஆண்டவர் மெசியா
மீட்பரைக் கண்டிடுவோம்
3. ஆபிரகாம் மகனாய் தாவீதின் மகனாய்
இயேசு பிறந்தாரே
அமைதியின் அரசனாய்
அரியணை அமர்ந்து ஆட்சி செய்தாரே