இயேசுவின் இருதயமே எங்கும் எரிந்திடும் அருள்மயமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசுவின் இருதயமே எங்கும் எரிந்திடும் அருள்மயமே

உந்தன் ஆசியும் அருளும் சேர்த்து வந்தால்

எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2


1. இறைவனுக்கிதயம் உண்டு - அந்த

இதயத்தில் இரக்கம் உண்டு - 2 - என்றும்

இரங்கிடும் இறைவன் இருப்பதனால்

இங்கு அனைவர்க்கும் வாழ்வு உண்டு - 2


2. கடவுளின் கருணை உண்டு அந்த கருணைக்கு உருவம் உண்டு -2

அவர் உருவத்தில் உதித்தேழும் உயிர் அதனால்

எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு


3. இரவினில் தீபமுண்டு இந்த இல்லத்தில் ஒளியுமுண்டு - 2

எங்கள் இருதய அன்பர் விழித்திருந்தால்

எந்த இரவிலும் காவலுண்டு - 2