நல்ல காலம் பிறந்திருக்கு
பதுவைப் புனிதரின் அருள் நமக்கு
பலகோடி நன்மைகளைப் புரிந்துவிடவே வருவார்
மன்றாடுவோம் நாம் மன்றாடுவோம்
பாதைகள் தெரிந்திட நடை தொடர்வோம்
1. எளிமையின் கோலத்தில் ஆலய பீடத்தில்
ஆறுதல் சொல்கின்ற அருளாளன்
ஏழைகள் எளியவர் வறியவர் வருகையில்
அருட்கரம் தருகின்ற அன்பாளன்
தயைக்கடலே தடாகமே தனித்தவரின் தஞ்சமே
திருவடி வந்தோம் அருள்பொழிவாய்
2. எங்கள் தஞ்சமும் எங்கள் மகிழ்ச்சியும்
எங்கள் நம்பிக்கையும் நீரல்லவா
தூய்மை துலங்கும் லீலிமலரே
விலைமதிப்பில்லா மாணிக்கமே
வீரம் பொருந்திய மேய்ப்பரே
மண்ணுலகின் காவலரே திருவடி அருள்புரிவாய்