சுவாமீ! இவருக்கு முடிவில்லாத காலத்தின் பேரின்ப சுகத்தைக் கட்டளையிட்டருளும். நித்திய காலத்தின் பிரகாசம் இவருக்குப் பிரகாசிக்கக்கடவது, ஆமென்.
சுவாமீ கிருபையாயிரும்,
கிறீஸ்துவே கிருபையாயிரும்,
நரக வாசலிலிருந்து இவருடைய ஆத்துமத்தைக் கைதூக்கி இரட்சித்துக்கொள்ளும் சுவாமீ! இவர் சமாதானத்தில் இளைப்பாறக்கடவாராக.
முதல் - சுவாமீ! நாங்கள் இந்த ஸ்தலத்திலே இருந்து கூப்பிடுகிற சத்தம்.,
துணை - தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வேசுரா சுவாமீ! தேவரீருடைய அடியானாகிய இவருடைய ஆத்துமத்தின் பாவ அசுத்தத்தைப்போக்கி, உலகத்துக்கு இவர் செத்தவனாயிருந்தாலும் பரகதியில் உமக்குப் பிழைக்கிறவரா யிருக்கவும், சரீரத்தின் துர்ப்பலத்தினால் இவர் செய்த குற்றங்கள் உமது மட்டில்லாத கிருபாகடாட்சத்தால் பொறுக்கப்படவும் அநுக்கிரகம் செய்தருளவேண்டுமென்று தேவரீரை வேண்டிக் கொள்ளுகிறோம். இந்த மன்றாட்டுகளையெல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுநாருடைய திரு முகத்தைப் பார்த்து தந்தருளும் சுவாமீ, ஆமென்.