♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆண்டவரே இரக்கமாயிரும்
ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம் இரக்கமாயிரும்
1. இறைவா உம் இரக்கத்திற்கேற்ப
என் மீது இரக்கம் வையும்
உம் இரக்கப் பெருக்கத்திற்கேற்ப
என் குற்றங்களைப் போக்கிவிடும்
நான் செய்த குற்றத்தை என்னிடமிருந்து
முற்றிலும் கழுவிப் போக்கிவிடும்
என் பாவத்தைக் கழுவி என்னைத் தூய்மைப்படுத்தும்
2. தூயதோர் உள்ளத்தை இறைவா நீர்
என்னகத்தே உருவாக்கும்
உறுதி தரும் ஆவியை என்னுள் மலரச் செய்யும்
உம் திருமுன் இருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்
உமது பரிசுத்த ஆவியை என்னிடமிருந்து
எடுத்து விடாதேயும்