சுவாமீ கிருபையாயிரும்,
கிறீஸ்துவே கிருபையாயிரும்,
சுவாமீ இவர்மேல் தயையாயிரும், - ஒரு பர.
சர்வேசுரனுக்கு உகந்த சகல அர்ச்சியசிஷ்டவர்களே, இவருக்குச் சகாயமாக வாருங்கள். அர்ச்சிய பிரபுத்துவங்களைக் கொண்டிருக்கிற பக்திச் சுவாலகரே, ஞானாதிக்கரே, பிராதமிகரே, அதிதூதரே, தூதரே, இவருக்கு எதிராக வந்து இவருடைய ஆத்துமத்தைக் கூட்டிக்கொண்டு போய்ப் பராபர கர்த்தருடைய சந்நிதியிலே விடுங்கள்.
இப்பரதேசத்தை விட்ட ஆத்துமமே, அநந்த காருண்ணிய கிறீஸ்து வானவர் இன்றைக்கு உன்னைத் தம்முடைய திருவடியாராகிய அறவோருடைய சமுதாயத்தில் அழைத்தருளு வாராக. தமது தேவ சந்நிதியில் உன்னை வைத்துக்கொள்ளு வாராக. சம்மனசுகள் அபிரகாம் இருக்கிற ஸ்தலத்துக்கு உன்னை அழைத்துக்கொண்டுபோய் விடக்கடவார்களாக. ஒரு பர. (தீர்த்தம்).