♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என்னை நேசிக்கின்றாயா - 2
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா (2)
1. பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினைப் பார் - 2
பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய் (2) - என்னை...
2. பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் வா (2)
உன் பாவம் யாவும் சுமப்பேன் நான்
பாதம் தன்னில் இளைப்பாறவா (2) - என்னை...
3. வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால் (2)
தேடி மீட்டிட பிதா அனுப்பியதால்
ஓடி வந்தேன் மானிடனாய் (2) - என்னை...
4. உம்மை நேசிக்கின்றேன் நான் - 2
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ