♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என் மக்களின் அழுகை கேட்டேன்
சுமை சுமக்கும் வலிகள் அறிவேன்
ஆறுதல் கூறிடவும் ஆதரவாகிடவும்
யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
1. கற்றதை உணர்த்தியே களைத்தவரை ஊக்குவித்தே
கண்களைக் கருணையின் ஒளியால் நிரப்புவேன்
கடவுளே நீர் என்னோடு இருக்க சிலுவையும் சுமப்பேன்
இதோ நான் இருக்கிறேன் இன்றே நான் வருகிறேன்
கடல் கடந்து போனாலும் தீ நடுவே நடந்தாலும்
தீமை உன்னை அணுகாது
நீ கலங்கிடாமலும் களைத்துப் போகாமலும்
உன் கால்கள் தடுமாறாமலும்
நாம் உன்னோடு இருந்து உன்னை உறுதிசெய்து
உன் கரம் பிடித்து அன்பால் வழிநடத்துவோம்
2. கூக்குரல் இன்றியே உம் அரசினை அறிவிப்பேன்
நீதியின் சார்பிலே நின்றிடத் தயங்கிடேன்
கடவுளே உந்தன் ஆவி என்னைக் காலமும் நடத்தும்
இதோ நான் இருக்கிறேன் இன்றே நான் வருகிறேன்
என் மக்களின் அழுகை கேட்டேன்
சுமை சுமக்கும் வலிகள் அறிவேன்
ஆறுதல் கூறிடவும் ஆதரவாகிடவும்
உன்னை நான் அனுப்புவேன் அபிஷேகம் செய்கிறேன்