♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
எனக்காக பலியாகும் அன்பின் தெய்வமே
என் வாழ்வை பலியாக்க உன் பாதம் வருகின்றேன்
இறைவா ஏற்று பலியாய் மாற்றி
உன் பணி செய்ய அருள் தாரும்
1. தாலாட்டுப் பாடும் அருவியிலே
ஊஞ்சலாடி வரும் மலரெடுத்து
மனதைத் தொடுத்து உன் பாதம்
மணம் வீசப் படைக்கின்றேன்
2. அலைந்தோடும் வாழ்வினிலே
கரைந்து ஓடிடும் நீரெடுத்து
என் பாவம் கழுவி உன் நினைவில்
வாழ்ந்திட விழைகின்றேன்