எங்கள் ஆத்தும சிருஷ்டிகரான கர்த்தாவே! உம்மாலே படைக்கப்பட்ட எங்கள் ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும். தயாள சம்பூரணரான பிதாவே! உமது பிள்ளைகள் பேரில் தயவாயிரும். எங்கள் இரட்சணியத்தின் காரணருமாய் எங்களுக்காகப் பலியானவருமாயிருக்கிற கர்த்தாவே! உமது திரு இரத்தத்தினாலும் திரு மரணத்தினாலும் வந்த பலன்களை எங்களுக்குக் கட்டளை செய்தருளும். மகா நேசத்திற்குப் பாத்திரவானான மதுர சேசுவே! எங்கள் நிர்ப்பாக்கியத்தைக் கண்டிரங்கி எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமீ.