தேவன் திருமகனே அவர் பாதம் சரணடைந்தேன் மன்னன் சொன்ன வேதம் பக்தன் எந்தன் கீதம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தேவன் திருமகனே அவர் பாதம் சரணடைந்தேன்

மன்னன் சொன்ன வேதம் பக்தன் எந்தன் கீதம்

வாழும் வழி திறந்தேன்


1. அழகான நாதன் முன்னே அடியாரின் கால்கள் பின்னே

அவர் பாதம் தூய செந்தேன் மலராகித் தாங்க வந்தேன்

பாரெல்லாம் இயேசுவின் ஊராகப் பார்ப்பேன்

சேராத ஆடெல்லாம் நான் தேடிச் சேர்ப்பேன்

மன்னன் எவ்வழி அவ்வழி சென்றினி வாழ்வேனே நாளுமே


2. எளியோர்க்கு தேவன் சொன்ன

அருள்வாக்கைக் கூற வந்தேன்

சிறை வாடும் மாந்தர் மீண்டும்

இறைவாழ்வில் சேர வந்தேன்

வாழ்விலா சேய்களின் தாயாகிப் போவேன்

போராடும் ஏழையின் கூர்வாளும் ஆவேன்

விண்ணவன் மண்ணில் என்னுரு கொண்டிட

வாழ்வேனே நாளுமே