♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
எழுவாய் அமலா மகிழ எம் இதயம்
எமதுள்ளம் மகிழ்ந்திட வா
அருள்பொழி நிலவே இருள்நிறை உலகை
மாற்றி அமைத்திட வா
1. வாழ்வில் உமை மறந்தோம் எம்
தாழ்வில் உமை இகழ்ந்தோம்
வானவர் போற்றும் வானமுதே
வாழ்த்திப் புகழ்ந்திட வா
2. பாவக் கறை போக்க எம்
வாழ்வில் குறை நீக்க
தாழ்ந்து நின்றோம் உம் மாபதமே
வாழ்த்திப் புகழ்ந்திட வா