♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உன்னைத் தேடி வந்தேன் சன்னிதியில் நின்றேன்
உனக்கு நான் பிள்ளையல்லவா (4)
1. பள்ளம் நோக்கிப் பாய்ந்திடும் நீரைப்போல - 2 (உன்னைத் தேடி)
நீரைத் தேடி ஓடிவரும் மானைப் போல - 2 (உன்னைத் தேடி)
2. கதிரவன் நோக்கித் தேடும் கொடிபோல - 2 (உன்னைத் தேடி)
நீருக்காக ஏங்கிடும் நிலம் போல - 2 (உன்னைத் தேடி)
3. அன்பை நோக்கித் தேடிவரும் நண்பரைப் போல - 2 (உன்னைத்.)
தாயைப் பார்த்து தாவி வரும் பிள்ளை போல - 2 (உன்னைத்...)